பனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது

Published By: Digital Desk 4

25 Jun, 2018 | 12:40 AM
image

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜீ குழுவுக்கான போட்டியில் பனாமாவை 6 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றில் விளையாட தகதிபெற்றது.

நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற இப் போட்டியில் 6 கோல்களைப் போட்டதன் மூலம் இம் முறை உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அதிக கோல்களைப் போட்ட அணி என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. அத்துடன் பிரதான கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இங்கிலாந்து ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

நுட்பத்திறனுடனான அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இங்கிலாந்து இடைவேளைக்கு முன்னரே 5 கோல்களைப் போட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து கோல் மழை பொழியப் போகின்றது என பொதுவாக கருதப்பட்டது. ஆனால் இரண்டாவது பகுதியில் இங்கிலாந்து ஒரு கோலுக்கு கட்டுப்படுத்தப்பட்டதுடன் பனாமாவும் ஒரு கொலைப் போட்டது.

இப் போட்டியில் ஹெரி கேன் 3 கோல்களைப் போட்டமை விசேட அம்சமாகும்.

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் கீரான் ட்ரிப்பர் பரிமாறிய பந்தை தனது தலையால் தட்டி ஜோன் ஸ்டோன்ஸ் முதலாவது கோலைப் போட்டார்.

14 நிமிடங்கள் கழித்து ஜெசே லிங்கார்டை தனது பெனல்டி எல்லையில் பிடெல் எஸ்கோபார் வீழ்த்தியதால் இங்கிலாந்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

இந்தப் பெனல்டியை இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கென் லாவகமாக கோலினுள் புகுத்தினார்.

போட்டி 36ஆவது நிமிடத்தைத் தொட்டபோது ரஹீம் ஸ்டேர்லிங் பரிமாறிய பந்தை ஜெசெ லிங்கார்ட் கோலாக்க இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

அடுத்த நான்காவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன்ஸ் தனது இரண்டாவது கோலைப் போட்டார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டு கோல்களைப் போட்ட முதலாவது இங்கிலாந்தின் பின்கள வீரரானார்.

இடைவேளைக்கு முந்திய உபாதையீடு நேரத்தில் இங்கிலாந்துக்கு இன்னுமொரு பெனல்டி வழங்கப்பட்டது. ஜோன் ஸ்டோன்ஸை மைக்கல் முரில்லோ தனது பெனல்டி எல்லையில் முரணான வகையில் வீழ்த்தியதால் இங்கிலாந்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது. ஹெரி கேன் இரண்டாவது தடவையாகவும் பெனல்டியை இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் பனாமா வீரர்கள் தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதால் இங்கிலாந்துக்கு கோல் மழை பொழிய முடியாமல்போனது.

எவ்வாறாயினும் போட்டியின் 62ஆவது நிமிடத்தில் ரூபன் லொவ்டஸ் சீக் பரிமாறிய பந்தை ஹெரி கேன் வலது காலால் உதைத்து கோலினுள் புகுத்தினார்.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் பிலிப்பே பெலோய், உலகக் கிண்ண இறுதிச் சுற்று வரலாற்றில் கோல் போட்ட முதலாவது பனாமா வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41