கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள ஜம்பெட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட இருவரும் தப்பிச்சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.