துருக்கியின் ஜனாதிபதி தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி டயிப் எர்டோகன் 59 வீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு கடும் சவாலாக விளங்குவார் என கருதப்பட்ட வேட்பாளர் முகரம் இன்சே 27 வாக்குகளையே பெற்றுள்ளார்

எர்டோகன் 50 வீத வாக்குகளை பெற்றால் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இடம்பெறவேண்டிய அவசியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடாளுமன்றத்திற்கான தேர்தலிலும் எர்டோகனின் கட்சி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன

அவரது ஏகே கட்சி 55 வீதவாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

2016 இராணுவப்புரட்சியை தொடர்ந்து பிரகடனம் செய்யப்பட்ட அவசரகால நிலை தொடர்கின்ற நிலையிலேயே துருக்கியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 இல் இடம்பெறவேண்டிய தேர்தல்களை ஜனாதிபதி எர்டோகன் முன்கூட்டியே நடத்தியுள்ளார்.