சவுதிஅரேபியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் விதத்தில் இன்று அந்த நாட்டின் பெண்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

பெண்கள் வாகனங்களை செலுத்துவதற்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பெண்கள் முதல்தடவையாக வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு வாகனங்களை செலுத்தியுள்ள பெண்களிற்கு காவல்துறையினர் பூக்களை வழங்கியுள்ளனர், பெற்றோர்கள் அவர்களை ஆசீர்வதித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 12 மணிக்கு பின்னர் சவுதி அரேபியாவில் பல பெண்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

சிலர் தங்கள் சகோதரர்கள் தந்தைமார்களுடன் வாகனத்தில் பயணித்துள்ளனர் சிலர் இதற்காக புதிய வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனனர்.

பல பெண்கள் மகிழ்ச்சியில் சத்தமிட்டுள்ளனர் சிலர் அழுதுள்ளனர் சிலர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டடுள்ளனர்.

எழுத்தாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கெடுத்துக்கொள்பவருமான சமர் அல்மொகிரென் இந்த நாள் வரும் என்பது எனக்கு தெரியும் ஆனால் இவ்வளவு வேகமாக வரும் என நம்பவில்லை நான் பறவை போல உணர்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சவுதிஅரேபிய இளவரசர் அல்வலீட் பின் டலால் தனது மகளுடன் வாகனத்தில் காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சவுதி அரேபியா இறுதியாக 21 ம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெண்கள் வாகனம் செலுத்த ஆரம்பித்துள்ளதை பாராட்டி சமூக ஊடகங்களில் பலர் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று காரை செலுத்துங்கள் நாளை சந்திரனிற்கு செல்லுங்கள் என ஒருவர் பதிவு செய்துள்ளார்

இன்னொரு நபர் வாகனங்களை செலுத்துங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்