ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை  அமெரிக்க உறுதிசெய்யும் என இலங்கையின் ஐநாவிற்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

.அமெரிக்கா தனது நேசநாடுகள் ஊடாக இதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னையை குடியரசுகட்சி அரசாங்கத்திற்கும்; ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் காணப்பட்டன  அவர்கள் அதிலிருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர் என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தொடர்பான பிரேரணைகளை அமெரிக்காவிற்கு பிரச்சினை எங்களுடைய பிரேரணைகள் பிரச்சினையில்லை என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.