யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதல் வணிக பீட இறுதிவருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த இரு மாணவர்களும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பினருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்துள்ளதுடன் மோதல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.