(இராஜதுரை ஹஷான்)

அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாம் அறிவோம். ஆகவே பிறர் தொடர்பில் புறம் கூறுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திலிருந்து விலகிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்திற்கு வர முடியாத  நிலைமை  காணப்படுகின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் அனுதாபம் வெளியிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற சர்வாதிகார நிர்வாகத்தின் காரணமாக இன்று  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவினமடைந்துள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு குழுவாக செயற்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தும் பாலமாகவே 16 உறுப்பினர்களும் செயற்படுவோம்.

தேசிய அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முறையற்ற விதங்களில் 16 உறுப்பினர்கள் மீதும் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குற்றஞ்சாட்டுபவர்கள் ஒரு போதும் மறந்து விடக் கூடாது 16 உறுப்பினர்களும் கடந்த மூன்று வருட காலமாக ஒன்றிணைந்து அரசாங்கத்தினை முன்னெடுத்து சென்றாவர்கள்  என்று. 

அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாமும்  அறிவோம் ஆகவே பிறர் தொடர்பில்  புறம் சொல்லுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் அதுவே அவரவர் அரசியல் இருப்பிற்கு நன்மையளிக்கும் என்றார்.