வியாபார நிலையத்திற்குள் புகுந்து 320000 ரூபா கொள்ளையிட்டு சென்ற திருடனின் செயற்பாடு சீ.சீ.டி.வி.கேமாராவில் சிக்கியது

ஹட்டன் கொட்டகலை பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 320000 ரூபா பணம் களவாடபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் 21ம் திகதி விடியற்காலை 01மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த வியாபர நிலையத்தில் பின்புற கதவினை உடைத்து வியாபார நிலையத்தின் உரிமையாளர் நித்திரையிலிருந்த அறைக்குள் புகுந்து அலுமாரி ஒன்றினுல் வைகக்கபட்டிருந்த 320000 ரூபா கொள்ளையிட்டு சென்றுள்ளான்.

கொள்ளயிட்ட கானோலிகள் வியாபாரா நிலையத்தில் பொறுத்தபட்டிருந்த சீ.சீ.டி.வி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களை கைது செய்வதற்கு சீ.சீ.டி.வி.கேமராவின் கானோலியோடு பொலிஸ் மோப்பநாய்களும் ஈடுபடுதத்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.