மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீப்பந்து சுழற்றியபோது அதில் இருந்து நெருப்பு  பக்தர்கள் மீது  வீழ்ந்ததில்; 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் மட்டு உன்னிச்சை பிரதேசத்தில் சற்று முன்னர் சனிக்கிழமை இரவு (11 மணியவில்) இடம்பெற்றுள்ளது என ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 7 ம் கட்டை மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடம்ற்று வருகின்றது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அம்மன் வீதி உலா வரும்போது அதற்கு முன்னாள் பக்தர் ஒருவர் தீப்பந்து சுழற்றி கொண்டிருந்த போது திடீரென தீப்பந்தில் இருந்து நெருப்பு பக்தர்கள் மேல் வீழ்ந்து தீப்பற்றியது. 

இதனையடுத்து பக்தர்கள்; சிதறி பயத்தில் ஓடியதுடன்  தீப்பற்றியவர்களின் உடைகளை கழற்றி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததுடன் இதில்  படுகாயமடைந்த  சிறுவர்கள் உட்பட 20 பேர்  கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் படுகாயமடைந்த 2 பேரை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.