பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. 

பாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான்  இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறித்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா கொல்லப்பட்டார்.

இதையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த முகமது குரசானி தெரிவிக்கையில், முல்லா ஃபஷ்லுல்லா கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்களது புதிய தலைவராக முப்தி நூர் வலி மஹ்சூத் என்பவரை புதிய தலைவராக நியமித்ததாகவும், முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.