சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து  மயிரிழையில் உயிர் தப்பினார்.

சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் இடம்பெற்று வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா பங்கேற்றார்.

அவர் குறித்த பிரசார மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி  வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு ஜனாதிபதியின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்கள் அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சனின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.