வட­கொ­ரிய அதிபர் கிம்மை சந்­தித்து நேர­டி­யாக உச்­சி­மாநாடு நடத்தி உல­கையே அதி­ர­வைத்த அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  "ஒரு மெகா வர்த்­தக பிர­முகர் - அர­சி­ய­லிலும் இரா­ஜ­தந்­தி­ரத்­திலும் மெகா வர்த்­தக செழிப்­புக்குக் கார­ண­மான தந்­தி­ரோ­பா­யங்­களை கடைப்­பி­டித்து வெற்றி பெறலாம்", என்­பதை உல­குக்கு நிரூ­பித்­துக்­காட்டி வரு­கிறார் என்ற புக­ழுக்கு உரித்­தா­ளி­யாவார்.  இப் பய­ணத்தில் மேலும் ஒரு குண்­டை வெடிக்க விட்­டி­ருக்­கிறார். 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 19 ஆம் திக­தி­யன்று அமெ­ரிக்க தூதுவர் ஐ.நா.சபை மனித உரிமைப் பேர­வையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையைக் கண்­டித்து உரை­யாற்­றிய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தா­கவும் அறி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவின் தீர்­மானம், அறி­விப்பு, விலகல் பற்­றிய விப­ர­மான ஆய்­வினை விளங்கிக் கொள்­வ­தற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவை பற்­றிய புரிதல் அவ­சி­ய­மா­கி­றது. ஐக்­கிய நாடுகள் சபை 24.10.1946 அன்று  உரு­வாக்­கப்­பட்­டது. மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கு­மான அவ­சியம் உண­ரப்­பட்­டதால் மனித உரி­மை­க­ளுக்­கான  ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு 1947ஆம் ஆண்டு சர்­வ­தேச மனித உரி­மை­க­ளுக்­கான பிர­க­ட­னத்தை வெளியிட்­டது. உலக மட்­டத்தில் மனித உரிமைப் பாது­காப்பில் இப்­பி­ர­க­டனம் ஒரு மைல் ­கல்­லாகும். ஐ.நா. சபையின் பொரு­ளா­தார, சமூக பேர­வையின் ஒரு அங்­க­மாக மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. சபை ஆணைக்­குழு செயற்­பட்­டது. 15.06.2006 அன்று ஆணைக்­கு­ழு­வுக்கு பதி­லாக புதிய கொள்கை விட­யங்­களை உள்­ள­டக்கி ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை நிறு­வப்­பட்­டது. இதன் தலை­மை­யகம் சுவி­ட்ஸர்­லாந்தில் ஜெனிவா என்ற பிர­ப­ல­மான நக­ரத்தில் அமைந்­துள்­ளது. இலங்­கை­யர்­க­ளுக்கு ஜெனிவா என்­றதும் மனித உரிமைப் பேரவை என்ற விடயம் ஞாப­கத்­துக்கு வரும் என்­பதை சொல்­லித்­தெ­ரிய வேண்­டி­ய­தில்லை. ஏனெனில் அந்­த­ள­வுக்கு இலங்­கையின் உள்ள பத்­தி­ரி­கைளில் –ஜெனிவா கூட்­டத்­தொடர்– என்ற சொற்­பதம் அடிக்­கடி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எவ்­வா­றா­யினும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் அமைப்பு எத்­த­கை­யது? அதன் நோக்­கங்கள் யாவை? அங்­கத்­துவ நாடுகள் எவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றன? பேரவை அமர்­வுகள், விவா­தங்கள், தீர்­மா­னங்கள் எவ்­வாறு அங்­கத்­துவ நாடு­களைப் பாதிக்­கின்­றன? ஐ.நா. சபையின் பாது­காப்புச் சபை போன்று மேற்­கொண்ட தீர்­மா­னங்­களை செயற்­ப­டுத்தும் அனு­பவம் உள்­ளதா என்­பது பற்றியும் பார்க்க வேண்டும்.

பேர­வையில் 47 அங்­கத்­துவ நாடுகள் பிராந்­திய அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றன. 3 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை தெரிவு நடை­பெ­று­கி­றது. ஒரு நாடு தொடர்ந்து இரு முறை மட்டும் தெரிவு செய்­யப்­ப­டலாம். அதா­வது ஒரு நாடு தொடர்ந்து 6 ஆண்­டுகள் அங்கம் வகிக்­கலாம். தற்­போ­தைய பேரவையின் தொடர் 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யது. 3 வாரங்கள் இக்­கூட்­டத்­தொடர் இடம்­பெறும். ஐ.நா. சபை அங்­கத்­துவ நாடு­களில் இடம்­பெ­று­வ­தாகக் கூறப்­படும் மனித உரி­மை­ மீறல்களை விசா­ரித்தல் மற்றும் பிர­ஜை­களின் ஒன்று கூடு­வ­தற்­கான உரிமை, சங்­கங்கள் அமைப்­ப­தற்­கான உரிமை, பேச்சு சுதந்­திரம், எழுத்துச் சுதந்­திரம், கருத்­துக்கள் வெளியி­டு­வ­தற்­கான உரிமை, இன, மத அடிப்­ப­டையில் சிறு­பான்மை இன மக்­களின் உரி­மைகள் மீறு­வ­து­ போன்ற சந்­தர்ப்­பங்­களில் அவ்­வி­ட­யங்­களில் கூடு­த­லான அக்­கறை செலுத்­து­கி­றது. அங்­கத்­துவ நாடுகள் பிராந்­திய அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றன. ஆசிய பிராந்­தி­யத்­துக்கு 13, ஆபி­ரிக்க பிராந்­தி­யத்­துக்கு 13, கிழக்கு ஐரோப்­பிய பிராந்­தி­யத்­துக்கு 6, இலத்தீன் அமெ­ரிக்க கரி­பியன் பிராந்­தி­யத்­துக்கு 8, மேற்கு ஐரோப்­பிய பிராந்­தி­யத்­துக்கு 7 என்­ற­வா­றாக 47 நாடு­களும் பிராந்­தி­யத்தில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வது ஜன­நா­யக கோட்­பாட்­டுக்கு ஏற்­பு­டை­ய­தான ஒன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா. பாது­காப்புச் சபை நிரந்­தர அங்­கத்­துவ நாடுகள் ஐந்தும் பிராந்­திய அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென்­பதும் 90 களின் ஆரம்­பத்­தி­லி­ருந்து ஐ.நா. சபை கட்­ட­மைப்பில் சீர்­தி­ருத்­தங்கள் அவ­சியம் என்ற வாதப்­பி­ரதி வாதங்­களில் பாது­காப்புச் சபை நிரந்­தர அங்­கத்­துவ நாடுகள் பிராந்­திய அடிப்­ப­டையில் அமைக்­கப்­பட வேண்டும் என்­பதும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும். 

தற்­போது மனித உரிமைப் பேரவை என பெயர் மாற்றம் பெறு­வ­தற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் 53 அங்­கத்­துவ நாடுகள் இடம்­பெற்­றன. பிராந்­திய அடிப்­ப­டையில் நாடு­களுக்கு இடம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. ஐ.நா. கூட்­டத்தில் பங்­கு­பற்­றிய நாடு­களின் தெரிவில் 53 நாடுகள் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 2006 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவை அமைக்­கப்­படும் போது மனித உரி­மை­களை பாது­காப்­ப­திலும் மேம்­ப­டுத்­து­வ­திலும் உறு­தி­செய்­யப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளையும்  அர்ப்­ப­ணிப்­புக்­க­ளையும் உயர்த்திப் பிடிக்­க­வேண்டும். மனித உரி­மைகள் பாது­காப்பு, மேம்­ப­டுத்­தலில் உயர்­த­ரங்­களைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்­பதே அத்­தீர்­மா­னத்தில் குறித்­துக்­காட்­டப்­பட்ட விட­யங்­களில் பிர­தா­ன­மா­ன­தாகும். பேர­வைக்குத் தெரிவு செய்­யப்­பட்ட 47 நாடு­களில் ஏதா­வது ஒரு நாட்டின் மனித உரி­மைகள் தொடர்­பான பெறு­பேறு தவ­றா­ன­தென சபை தீர்­மா­னித்தால் அந் நாட்டை இடைநிறுத்தம் செய்ய ஐ.நா. பொதுச்­ச­பைக்கு அதி­காரம் உண்டு. பொதுச்சபை அங்­கத்­த­வர்­களின் 2/3 பங்­கினர் இடை­நி­றுத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கினால் ஒரு நாட்டை இடை­நி­றுத்தம் செய்­ய­மு­டியும். நடை­மு­றையில் 2-/3 பங்கு வாக்கு பெறு­வ­தென்­பது இய­லாத காரி­ய­மாகும். மனித உரிமை பேரவைக் கூட்டம் பங்­குனி, ஆனி, புரட்­டாதி மாதங்­களில் நடை­பெ­று­கி­றது. ஐ.நா. அங்­கத்­துவ நாடு­களில் 1/3 பங்­கினர்  விசேட அமர்­வுகள் அவ­சியம் எனக்­கூறி தீர்­மா­னித்தால் விசேட அமர்­வுகள் இடம்­பெறும். இவ்­வா­றான 20 விசேட அமர்­வுகள் அண்­மையில் இடம்­பெற்­றன. ஆசிய பிராந்­தி­யத்­துக்குள் தென்­கொ­ரியா, கிரி­கிஸ்தான், மொங்­கோ­லியா, பிலிப்பைன்ஸ், ஐக்­கிய அரபு ராஜ்­ஜியம், சீனா, ஈராக், ஜப்பான், சவூதி அரே­பியா, ஆப்­கா­னிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், கட்டார் ஆகி­ய­ 13 நாடுகள் உள்ளடங்கும். இலங்கை 2006 – -2008 ஆம் ஆண்டு காலங்­களில் பேரவை சபை அங்­கத்­துவ நாடாக தெரிவு செய்­யப்­பட்­டமை கவ­னத்தில் கொள்­ளத்­தக்­கது. உலக நாடு­களில் மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­திலும் மேம்­ப­டுத்­து­வ­திலும் பேர­வையின் பொறி­மு­றைகள் பிர­தா­ன­மா­னவை. Universal Periodic Review என ஆங்­கி­லத்தில் அழைக்­கப்­படும், சர்­வ­தேச காலப்­ப­குதி மீள்­நோக்கு என தமிழில் அழைக்­கப்­ப­டு­கி­றது. இதன் நோக்­கங்­க­ளாக அங்­கத்­துவ நாடு­க­ளுக்குள் மனித உரிமை பாது­காப்பினை மேம்­ப­டுத்தல் மற்றும் வலுப்­ப­டுத்­தல், அங்­கத்­துவ நாடு­களின் அர்ப்­ப­ணிப்பில் கடப்­பா­டு­களில் முன்­னேற்­றங்­க­ளையும் சவால்­க­ளையும் மதிப்­பீடு செய்தல், மனித உரிமையை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அங்­கத்­துவ நாடு­களின் ஆற்றல் – தொழில்­நுட்ப வல்­ல­மையை வலுப்­ப­டுத்தல், அங்­கத்­துவ நாடு­களின் உடந்­தை­யா­ளர்கள் மத்­தியில் சிறந்த நடை­மு­றை­களைப் பகிர்ந்து கொள்­ளுதல், பேர­வையின் ஒத்­து­ழைப்பு மற்றும் கூட்­டு­றவை அதி­க­ரித்தல், மனித உரிமை ஆணைக்­குழு செய­ல­கத்தின் உதவி மற்றம் ஒத்­து­ழைப்பை அதி­க­ரித்தல் ஆகி­ய­வை­யாகும்.

இவ்­வா­றான மனித உரிமை பேர­வையின் பின்­ன­ணியில் உலகில் ஏக வல்­ல­ர­சான அமெ­ரிக்கா வில­கு­வ­தாக பிர­க­டனம் செய்­தமை பற்றி உற்று நோக்க வேண்­டி­யுள்­ளது. ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  ஜெனி­வா­வுக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் பேர­வையைக் கண்­டித்து 19.06.2018 அன்று உரை­யாற்­றினார். பேரவை மனித உரி­மை­களை குழி தோண்டிப் புதைப்­ப­வர்­களை பாது­காக்கும் கோட்டை எனவும் பேரவை அழுக்­குப்­ப­டிந்த இட­மாகும் எனவும் கண்­டித்­தனர். அமெ­ரிக்கா மனித உரி­மை­களை மிகவும் மதிக்­கி­றது எனவும் பேர­வையின் இரட்­டைத்­த­ன­மான கபடப் போக்­கினை சகிக்க முடி­யா­துள்­ளது எனவும் கண்­டித்­துள்­ளனர். நடை­பெறும் 2018 ஆனி மாத கூட்­டுத்­தொ­டரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் புதிய குடி­வ­ரவு கொள்­கையை மனித உரி­மை­க­ளுக்­கான ஆணை­யாளர் கண்­டித்து உரை­யாற்­றி­யதோடு மட்­டு­மல்லாமல் அமெ­ரிக்­காவின் புதிய கொள்கை மன­சாட்­சி­யற்­றது என்றும் கூறினார். இக்­கொள்கை குடும்­பங்­களைப் பிரிக்­கின்­றது. பெற்­றோ­ரையும் பிள்­ளை­க­ளையும் பிரிக்­கின்­றது என கண்­டித்தார். அமெ­ரிக்க அதிபரின் புதிய குடி­வ­ரவு கொள்கை அமெ­ரிக்­கா­வினுள் பலத்த விமர்­ச­னத்தை தோற்­று­வித்­துள்­ளது. 

இதனை அமெ­ரிக்க ஜன­நா­யக, குடி­ய­ரசுக் கட்­சி­களைச் சேர்ந்த பல அங்­கத்­த­வர்கள், வர்த்­தக மன்­றங்கள், மனித உரிமை ஆர்­வ­லர்கள் தொடர்ந்தும் கண்­டிக்­கின்­றனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இஸ்ரேல் தொடர்ந்து ஐ.நா. சபை, பாது­காப்புச் சபை, மனித உரிமைப் பேரவை தீர்­மா­னங்­களை உதா­சீனம் செய்­வதால் பேர­வையில் இஸ்­ரே­லுக்கு எதி­ரான கண்­ட­னங்கள் உரத்து ஒலிக்­கின்­றன. அமெ­ரிக்­காவால் இஸ்­ரே­லுக்­கெ­தி­ரான கண்­ட­னங்­களைத் தாங்­க­மு­டி­ய­வில்லை. அதனால் அமெ­ரிக்க தூதுவர் பேரவை பக்­கச்­சார்­பாக நடக்­கின்­றது. குறிப்­பாக இஸ்­ரேலை தாக்­கு­வது தான் பேர­வையின் நோக்கம். இவ்­வா­றான பேர­வையில் அமெ­ரிக்கா தொடர்ந்து அங்கம் வகிக்க முடி­யாது என தெரி­வித்தார்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட ட்ரம்பை தெரிவு செய்­வ­தற்கு முன்­னைய காலப்­ப­கு­தி­யிலும் அமெ­ரிக்க ெவளிநாட்டுக் கொள்கை வகுப்­பா­ளர்கள் மட்­டத்தில் மனித உரிமை பேர­வையின் செயற்­பா­டுகள் தொடர்­பாக அதி­ருப்தி நில­வி­யது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைக்­கான பேரவை நிறு­வப்­பட்ட தரு­ணத்தில் அப்­போ­ைதய அமெ­ரிக்கத் தூதுவர் (ட்ரம்ப் அரசின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர்) பேர­வையின் செயற்­பா­டுகள் செல்லும் திசை ஆரோக்­கி­ய­மா­னதல்ல எனவும் பேர­வையின் அமைப்பை எதிர்த்­தி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போ­ைதய அமெ­ரிக்கத் தூதுவர் சென்ற ஆண்டு பேரவை கூட்­டத்­திலும் பேரவை இஸ்­ரே­லுக்கு எதி­ரான போக்கைக் கடைப்­பி­டிக்­கி­றது என்றும் மனித உரி­மை­களை மதிக்­காத நாடு­க­ளான சீனா, எகிப்து, சவூதி அரே­பியா ஆகிய நாடுகள் பேர­வையின் 47 அங்­கத்­துவ நாடுகள் கொண்ட சபையில் இடம்­பெ­று­வது நகைப்­புக்­கான விடயம் எனவும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு தொடர்­பான ஐ.நா. தூதுவர், அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் வரிக்­கொள்­கை­க­ளையும் பேர­வையில் கண்­டித்­துள்ளார். அமெ­ரிக்க அதி­பரின் வரிக்­கொள்கை சிலரை செல்­வந்­த­ர்களாக்கி பலரை வறு­மையில் வீழ்த்­து­வதாகக் ­கண்­டித்தார். மனித உரிமை பேர­வையில் நேர­டி­யான மனித உரிமை பிரச்­சி­னைகள் மட்­டு­மல்ல, பொரு­ளா­தாரக் கொள்­கைக்கும் மனித உரிமையை பாது­காப்­பதில் செல்­வாக்கு செலுத்துவதா­லேயே வறுமை ஒழிப்­புக்­கான ஐ.நா. தூதுவர் அமெ­ரிக்க அதி­பரின் கொள்­கையைக் கண்­டித்தார். 

பிர­ப­ல­மான சில மனித உரிமை அமைப்­புக்கள் அமெ­ரிக்கா விலகல் தீர்­மா­னத்தை மேற்­கொள்ளக் கூடாது என்று  தெரி­வித்­துள்­ளன. பேர­வையை வினைத்­தி­ற­னாக செயற்­பட வைக்கும் சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டும் என Human Right Watch தெரி­வித்­துள்­ளது. பேர­வையில் உரை­யாற்­றிய HRW அமெ­ரிக்­காவின் ஒரு திசை நோக்­கிய பார்வை ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல எனவும் ஒரு திசை நோக்­கிய பார்­வையில் இஸ்­ரேலின் நலன்கள் மட்டும் தான் அமெ­ரிக்­காவின் கண்­க­ளுக்குத் தெரி­கி­ன்றன என்றும் அத­னா­லேயே அமெ­ரிக்கா எல்­லா­வற்­றுக்கும் மேலாக இஸ்­ரே­லுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது எனவும் கண்­டித்­துள்­ளது.  பிரிட்டிஷ் வெளிநாட்­ட­மைச்­சரும் பேர­வையில் இஸ்ரேல் விரோதப் போக்கை கண்­டித்தார். எனினும் பேர­வையின் பெறு­ம­தி­யான பங்­க­ளிப்பை பிரித்­தா­னியா மதிக்­கி­றது எனவும் கூறினார்.

வட­கொ­ரிய அதி­ப­ருடன் உச்­சி­ம­கா­நாடு நடத்தி உலகை அதி­ர­வைத்த ஜனா­தி­பதி ட்ரம்ப் மீண்டும் பலத்த விமர்­ச­னங்­க­ளுக்குட்­ப­டு­கிறார். உலகின் அதி­சக்தி வாய்ந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரிக்கும் ட்ரம்ப் பாரிஸ் கால­நிலை மா­நாட்­டி­லி­ருந்து தன்­னிச்­சை­யாக வில­கினார். ஈரா­னுடன் 6 நாடுகள் ஒரு­மித்து முன்வைக்கப்பட்ட ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகினார். இப் போக்கு அமெரிக்காவின் தற்போதைய வெளிநாட்டு கொள்கையின் தடுமாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் பிரகடனப்படுத்திய புதிய குடிவரவுக் கொள்கையை அமெரிக்காவின் முதல் பெண்மணியான அவரின் மனைவி எதிர்த்துக் குரலெழுப்பியுள்ளார். மெக்சிக்கோவிலிருந்து பெற்றோருடன் இணையமுடியாமல் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளமை கொடுமை என்றார். முன்னாள் அதிபர் புஷ்ஷின் பாரியாரும் புதிய குடிவரவுக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மனிதாபிமானமற்றது என்கிறார்.

இதற்கிடையில் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதன் பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை, மனித உரிமைப் பேரவையில் உறுதியளித்துள்ள கடப்பாடுகளையும் அர்ப்பணிப்புக்களையும் நிறைவேற்ற அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதரக அறிக்கை கூறுகின்றது. இலங்கையில் தமது இராஜதந்திரச் சேவையை நிறைவுசெய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் சர்வதேச அரங்குகளில் ஆதரவளிக்கும் என்பதை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்)