இரண்டாம் சுற்றை குறிவைத்து களமிறங்கும் பெல்ஜியம்

Published By: Digital Desk 4

23 Jun, 2018 | 04:17 PM
image

(நெவில் அன்தனி)

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் ஜீ குழுவில் தனது ஆரம்பப் போட்டியில் பனாமாவை 3 க்கு 0 என பதம்பார்த்த பெல்ஜியம் இன்று நடைபெறவுள்ள டியூனிசியாவுடான போட்டியிலும் இலகுவாக வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் என நம்பப்படுகின்றது. 

பெல்ஜியத்துக்கும் டியூனிசியாவுக்கும் இடையிலான போட்டி மொஸ்கோ ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் கன்னிப் பிரவேசம் செய்த பனாமாவுடனா போட்டியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ரோமேலு லூக்காக்கு இன்றைய போட்டியிலும் பெல்ஜியத்தின் வெற்றிக்காக முழுவீச்சில் விளையாடவுள்ளார்.

எவ்வாறாயினும் தனது ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்துக்கு பெரும் சவால் விடுத்து கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவிய டியூனிசியா, எதிர்த்தாடும் தன்மையை அதிகளவில் பிரயோகிப்பது அவசியம் என கால்பந்தாட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

தென் கொரியாவிலும் ஜப்பானிலும் 2002இல் கூட்டாக நடத்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஒரே குழுவில் இடம்பெற்ற இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி 1 க்கு 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது. 

எனினும் ஐரோப்பாவின் பலம் பொருந்திய கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றான பெல்ஜியத்துடனான தனது இரண்டாவது உலகக் கிண்ண சந்திப்பு டியூனிசியாவுக்கு இலகுவாக அமையாது என்பது திண்ணம்.

அணிகள் விபரம்

பெல்ஜியம்: திபோட் கோர்ட்டொய்ஸ், ஜான் வெர்ட்டொஞ்ஜென், டெட்றிக் பொயாட்டா, டொபி அல்டர்வெய்ரெல்ட், அக்செல் விட்செல், கெவின் டி ப்றயன், யானிக் கெரஸ்கோ, தோமஸ் மியூனியர், ட்ரைஸ் மேர்ட்டென்ஸ், ஈடன் ஹஸார்ட், ரொமேலு லூக்காக்கு

டியூனிசியா: பாறூக் பென் முஸ்பபா, யாசின் மெரையா, சியாம் பென் யூசெப், டிலான் ப்ரொன், ஊசாமா ஹத்தாதி, எலியெஸ் ஸ்கிரி, ஆனிஸ் பாத்ரி, பேர்ஜானி சசி, பாக்ரெதின் பென் யூசெப், வாஹ்பி காஸ்ரி, நயிம் ஸ்லிட்டி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09