"இரும்பு கரம் கொண்டு நசுக்க நினைத்தால் பாரிய எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்"

Published By: Vishnu

23 Jun, 2018 | 02:15 PM
image

(எம்.மனோசித்ரா)

இரும்பு கரம் கொண்டு உழைக்கும் மக்களின் போராட்டத்தை நசுக்க நினைத்தால் பாரிய எதிர்விளைகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என தபால் ஊழியர் சங்க ஒன்றிணைப்பாளர் சிந்தக பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் சம்பள பிரச்சினை தொடர்பான கோரிக்கையாவது அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தபால் சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பினால் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது. எனினும் அரசாங்கம் அது தொடர்பில் எந்த பொறுப்பும் இன்றி செயற்படுகின்றது. இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பொது மக்களே பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு நாம் பொறுப்பல்ல. 

இந் நிலையில் அரசாங்கம் எமது விடுமுறை மற்றும் சம்பளம் என்பவற்றை நிறுத்தியுள்ளது. இது எம்மை ஏமாற்றி பணிக்கு திரும்ப செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகும். ஆனால் எமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்.

மேலும் அராசங்கம் இரும்பு கரம் கொண்டு உழைக்கும் மக்களின் போராட்டத்தை நசுக்க நினைத்தால் பாரிய எதிர்விளைகளை சந்திக்க நேரிடும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்