(இராஜதுரை ஹஷான்)

வனஜீவராசிகளின் அசமந்தப் போக்கும் பொறுப்பற்ற தன்மையுமே கிளிநொச்சி அம்பால்குலப் பிரதேசத்சில் சிறுத்தை  மனிதாபிமானமற்ற முறையில் அடித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதான காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பால்குலப் பிரதேச மக்கள் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளான விடயத்தை வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  

இச் சம்பவமானது வனஜீவராசிகள் அதிகாரிகளின் முன்னிலையிலேயே இடம்பெற்றள்ளது. எனவ‍ே அவர்களின் அசமந்த போக்கும் பொறுப்பற்ற தன்மையுமே இதற்கு பிரதான காரணம் என்பதனால் அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சிறுத்தையை அடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஆதாரமாக கொண்டு இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.