வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின்  உண்டியல் நேற்றைய தினம் இரவு இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு  திருடப்பட்ட  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இன்று பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் திருடப்பட்ட உண்டியல் பண்டாரிகுளம் குளத்தில் வீசப்பட்டு கிடப்பதை அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் உடைக்கப்பட்ட உண்டியலை  மீட்டெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.