இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கிடையிலான மூன்றவாதும் இறுதியுமான போட்டித் தொடர் பகலிரவு ஆட்டமாக மேற்கிந்தியத்தீவிலுள்ள பிரிட்ஜ் டவுன்னில் இன்றிரவு இலங்‍கை நேரப்படி 11 மணிக்கு ஆர்பமாகவுள்ளது.

 

மூன்று போட்டிகள் கொண்ட இத் டெஸ்ட்  தொடரின் முதலாவது போட்டி கடந்த 06 ஆம் திகதி போர்ட் ஓவ்ஸ்பெயினில் ஆரம்பமானது. இப்போட்டியில் மேற்கிந்தியத்தீவு அணி 226 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.  

இந் நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொடரின் இரண்டாவது போட்டி செய்ண்ட் லூசியாவிலுள்ள டரென் செமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்பமான இப் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இதன்மூலம் மேற்கிந்தியத்தீவு அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றதனால் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. 

ஆகவே இத் தொடரில் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி இன்று ஆரம்பிக்கும் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். இப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவினாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ தொடரை மேற்கிந்திய அணி கைப்பற்றும். 

பகலிரவு ஆட்டமாக இப் போட்டி அமைவதானல் இலங்கைக்கான வாய்ப்புகள் எந்தவகையில் அமையும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இதேவேளை இன்றை போட்டியில் இலங்கை அணிக்கு சுரங்கலக்மால் தலைமை  தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.சி.சி. தடைகள் காரணமாக தினேஸ் சந்திமல் இன்றைய போட்டியில் விளையாட முடியாத காரணத்தினாலேயே சுரங்கலக்மால் அணிக்கு தலைமை தாங்குவதுடன் உபாதை காரணமாக ரங்கன ஹேரத்தும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.