தோல்வியின் விளிம்பிலிருந்து 2 ஆம் சுற்று வாய்ப்பை நோக்கி நகரும் சுவிற்சர்லாந்து

Published By: Priyatharshan

23 Jun, 2018 | 10:12 AM
image

சேர்பியாவுக்கு எதிராக காலினிங்க்ரட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஈ குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட லீக் போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் தனிஒருவராக செயற்பட்டு ஷக்கிரி போட்ட கோலின் உதவியுடன் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை நோக்கி சுவிட்சர்லாந்து நகர்ந்துள்ளது.

ஆடுகளத்தின் மத்திய பகுதியில் பந்தைப் பெற்றுக்கொண்ட ஸ்டோக் சிட்டி கழக வீரரான ஸேர்டான் ஷக்கிரி, மிக வேகமாக பந்தை நகர்த்திச் சென்று செர்பிய கோல்காப்பாளர் விலடிமர் ஸ்டொஜ்கோவிச்சை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கோல் போட்டார். இந்த கோல் சுவிட்சர்லாந்துக்கு 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையிலான வெற்றியைக் கொடுத்தது.

எனினும் இந்த கோலைப் போட்ட மகிழ்ச்சியில் தனது ஜேர்சியை கழற்றிய ஷக்கிரி அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் இரண்டு அணியினருக்கும் கோல் போடக் கிடைத்த வாய்ப்புகள் நிறைவேறாத நிலையில் ஐந்தாவது நிமிடத்தில் சேர்பியா முதலாவதாக கோல் போட்டது. வலதுபுறத்தில் இருந்து துசான் டெடிச் பரிமாறிய பந்தை தலையால் முட்டிய அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் அருமையான கோல் ஒன்றைப் போட்டார்.

தொடர்ந்து இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொள்ள, வீரர்கள் அவ்வப்போது விதிகளுக்கு முரணான ஆட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகளும் கைகூடாமல் போயின.

இடைவேளையின்போது சேர்பியா 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 7ஆவது நிமிடத்தில் (52 நி.) 24 யார் தூரத்திலிருந்து சுவிட்சர்லாந்து வீரர் க்ரானிட் ஸாக்கா இடது காலால் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் சேர்பியாவின் கோலினுள் புகுந்தது. இது கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்தியது.

ஆறு நிமிடங்கள் கழித்து ஷக்கிரி வலது புறத்தில் இருந்து உதைத்த பந்து செர்பியாவின் இடது கோல் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியில் சென்றது.

தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் சேர்பியாவும் 82ஆவது, 84ஆவது, 86ஆவது நிமிடங்களில் சுவிட்சர்லாந்தும் எடுத்த கோல் போடும் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது சுவிற்சர்லாந்தின் வெற்றி கோலை ஸேர்டான் ஷக்கிரி போட்டார்.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்த அணி ஒன்று மீண்டு வந்து வெற்றிபெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தப் போட்டி முடிவுடன் இக் குழுவிலிருந்து கொஸ்டா ரிக்கா முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35