சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப்பாசறையில் கணிசமான தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப்பாசறையை ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சவிற்ஸர்லாந்து அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப் பாசறையில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியுள்ள நிலையில், இதில் கணிசமான போட்டியாளர்கள் தமிழ் மாணவர்கள் ஆவர்.

மேற்படி சுற்றுப்போட்டி அதன் பிரதான பயிற்றுனர் சிகான்.வி.கௌரிதாசன் தலைமையில் இடம்பெற்றதோடு இலங்கையில் இருந்து சென்ற சிகான்.ஆர்.ஜே.அலெக்ஸான்டர் பிரதம நடுவராகவும் பயிற்சிகளின் வளவாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.