சர்வதேச யோகா தினத்தையொட்டி டேராடுனில் மோடி தலைமையில் இடம்பெற்ற யோகா நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டி ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் மாதம் 21-ம் திகதி உலக யோகா தினமாக கொண்டாட ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் திகதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான யோகா தினம் நேற்று முந்தினம் கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இடம்பெற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற 73 வயது மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

டேராடுன் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுதா மிஷ்ரா (73) என்ற பெண், யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்துள்ளார். ஆனால் குறித்த வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தின் நுழைவு வாயிலைக் கடந்ததும் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக்கு கொண்டு செல்லும் பொழுதெ. அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.