உலகில் கடல் மட்­ட­மா­னது கடந்த 2,800 வரு­டங்­களில் இல்­லா­த­வாறு பல மடங்கு வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக புதிய ஆய்­வுகள் எச்­ச­ரித்­துள்­ளன.

இது தொடர்பில் சர்­வ­தேச விஞ்­ஞா­னி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இரு ஆய்வின் முடி­வுகள் நஷனல் விஞ்­ஞான அக்­க­ட­மியின் ஆய்­வேட்டில் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்டுள்­ளன.

1880 களி­லான கைத்­தொ­ழில் ­மய­மாக்­கத்­தை­ய­டுத்து உலகின் கடல் மட்டம் வேக­மாக உயர்ந்து வரு­வ­தாக அந்த ஆய்வு கூறு­கி­றது.

20 ஆம் நூற்­றாண்டில் கடல் மட்டம் 14 சென்­ரி­மீற்­றரால் உயர்ந்­துள்­ளது. இந்­நி­லையில் 1993 ஆம் ஆண்டில் கடல் மட்­டத்தின் உயர்வு 30 சென்­ரி­ம­ீற்­றரால் அதி­க­ரித்­துள்­ள­தாக அந்த இரு ஆய்­வு­களும் தெரி­விக்­கின்­றன.

கடல் மட்­டத்­தி­லான மேலும் 45 சென்­ரி­மீற்றர் உயர்வு புயல்கள் உள்­ள­டங்­க­லான இயற்கை அனர்த்­தங்­களைத் தூண்டி பெரும் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த கடல் மட்ட உயர்வுக்கு பூகோள வெப்பமாதலே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.