எம்.எம்.மின்ஹாஜ் ஆர்.யசி) 

விடுதலைப்புலிகளின் ஆதரவு உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் தமது நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டை விட்டு  வெளியேறிய பின்னரே இந்த அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு வருவதற்கான தடையினை விதித்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

 அவர்  தெரிவித்துள்ளதாவது

வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 14 பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது. 

எனினும் இந்த நபர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து கிளிநொச்சிக்கு சென்று அங்கு மக்களின் பணம் சேர்த்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே அரசாங்கம் இப்போது அவ்வுறுப்பினர்களுக்கு எதிராக தடை விதிப்பதாக வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து உணர்வு பூர்வமாக சிந்திக்கும் நபர்கள் கவனம் செலுத்த வேண்டும்  என  சபையில் மஹிந்த ராஜபக்ஷசுட்டிக்காட்டினார்.