மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொஸ்கொட தாரக்க உள்ளிட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் இன்று பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் இரு பொது மக்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர். 

இந் நிலையில் இச் சம்பவத்தின்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பியோடிய போதிலும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல பாதாள உலகக்குழுத் தலைவனான கொஸ்கொட தாரக்க உள்ளிட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

மாத்தறை துப்பாக்கிச் சூடு ; முக்கிய சூத்திரதாரி கைது