கொலை மிரட்டல் என முறைப்பாடு

Published By: Rajeeban

22 Jun, 2018 | 03:26 PM
image

மன்னார் நிருபர்

நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில்  இன்று  வெள்ளிக்கிழமை(22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் என்பவரே தனக்கு கொலை அச்சுரூத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நானாட்டான் பிரதேசசபையின் 4 ஆவது அமர்வு கடந்த  20 ஆம் திகதி புதன் கிழமை இடம் பெற்றது.

 குறித்த அமர்வில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தான்தோன்றித்தனமாக உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது எடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் சபையில் தெரிவித்ததையடுத்து பிரதேச சபை அமர்வில்  அமைதியின்மை ஏற்பட்டது.

 தொடர்ந்தும் பேச முற்பட்ட போது கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இடையூறு வழங்கப்பட்டதை தொடர்து அமைதியின்மையானது கைகலப்பாகியது. 

அதனை தொடர்ந்து அங்கிருந்த எனைய உறுப்பினர்களால் அமைதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக அமர்வை நடத்த முடியாமையினால் முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவுருத்தப்பட்டது.

 குறித்த அமர்வு இடம் பெற்று கொண்டிருந்த நிலையில் ஊடகவியளாலர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் முன்னிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எனவே தன்னை அச்சுறுத்தியமை தொடர்பாக  இன்று வெள்ளிக்கிழமை (22) காலை மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் நிலையத்திலும் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் நீதி கோரி முறைப்பாடு செய்துள்ளதாக   அச்சுரூத்தல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான்  பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் மேலும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02