கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்கள் சிறுத்தையை கொன்றதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என சூழலியலாளரான சட்டத்தரணி ஜகத் குணேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறுத்தையை கொன்றவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் மக்கள் தங்கள் தற்பாதுகாப்பிற்காக சிறுத்தையை தாக்கவில்லை என தெரிவித்துள்ள நாகரீக சமுதாயத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையை நியாயப்படுத்தவோ ஆதரிக்கவோ மன்னிக்கவோ முடியாது எனவும் சட்டத்தரணி ஜகத் குணேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறுத்தையை கொன்றவர்களிற்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.