மாத்தறையில் இன்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியான கொள்ளையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை நகரத்தில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்தில் 3 பொலிஸ் அதிகாரிகளும் இரு பொதுமக்களும் காயமடைந்திருந்தனர்.  இந்நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன் போது கொள்ளையர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய போதிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், முக்கிய சூத்திரதாரியான வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஷாமர இந்திரஜித் என்பவரே மாத்தறை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.