மாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்ததுடன் கொள்ளை கும்பல் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்