நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாநகர எல்லைக்குள் குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு விநியோகத்தை மட்டுப்படுத்த நேர்ந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.