முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹிட்லரை போல மாறி இலங்கையை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரபல மதகுருவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக சாடியுள்ளார்.

நான் பௌத்தமத துறவிகளை மதிக்கின்றேன் ஆனால் இந்த கருத்தை ஏற்க முடியாது என சிறிசேன தெரிவித்துள்ளார்.

தசாப்தகால இரும்புகர ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர எண்ணியதாலேயே 2015 இல் மக்கள் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காகவே வாக்களித்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரியில் மக்கள் உணவிற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் வாக்களிக்கவில்லை அவர்கள் ஜனநாயகம் சுதந்திரத்திற்காக வாக்களித்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மீண்டும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன் நாடு மீண்டும் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.