(எம்.எப்.எம்.பஸீர்)

"சண்டே லீடர்" பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை சி.ஐ.டி. இன்று விசா­ரணை செய்­ய­வுள்­ளது.

 

அதன்­படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை இன்று முற்­பகல் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 இன்று குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம், லசந்த கொலையின் பின்னர் சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை, லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பிலும்  ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவ­காரம் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப­ட­வுள்­ள­தாக குற்றப்  புலனாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.