போலி கணக்கு செலவு மோசடியில்   இஸ்ரேல் பிரதமரின் மனைவி  

Published By: Digital Desk 4

21 Jun, 2018 | 11:25 PM
image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு  மனைவி சாரா நம்பிக்கை துரோகம் மற்றும்  மோசடி  செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்திற்கு  உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டொலர் அளவிற்கு போலி செலவு கணக்கு காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரா மற்றும் பிரதமரின் அலுவலக முன்னாள் இயக்குனர் எஸ்ரா சைடாப் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பொதுமக்களின் வரிபணத்தை  தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் நேதன்யாகுவின் மனைவி சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

68 வயதாகும் நேதன்யாகு 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார். அவர் மீதும் லஞ்சம், மோசடி மற்றும்  நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவைதொடர்பாக, அவரது பதவி காலத்தில் இம்மாதிரியான பல விசாரணைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17