இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தினேஸ் சந்திமல் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பில் நாளை விசாரணை செய்ய  தீர்மானித்துள்ளதாக  ஐ.சி.சியின் ஒழுக்காற்று குழு தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரின் போது இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் பந்தை சேதப்படுத்தினார் என சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியது.

இதைத் தொடர்ந்து தினேஸ் சந்திமல் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நாளை ஐ.சி.சியின் ஒழுக்காற்று  குழு தலைவரின் தலைமையில் இடம்பெரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.