ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘சர்கார் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று  மாலை வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்ததது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த படத்தில் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக இந்த படம் வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சர்கார் ’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன் இந்த படம் சமகால அரசியலைப் பற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதுமட்டுமல்ல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியிருப்பதால் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் டிரெண்டிங் ஆக்கி தெறிக்கவிட்டு வருகிறார்கள்.