மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று (21) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கோ தற்போது ஒழுங்கான பதிலோ நியமனங்கலோ  வழங்கப்படாத நிலையில் 

அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்ததோடு.

 அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முக தோர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை எனவும் இவ்வாறான  செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உழைச்சளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தொரிவித்தனர்.

குறித்த போராட்டமானது இன்றுடன் நிறைவடைவதும் அல்லது தொடர்ச்சியாக நடைபபெறுவதும் அரசாங்கத்தின் கைகளில் தான்  உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.