(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

ஒலுவில் பகுதியில் வர்த்தக ரீதியாக துறைமுகம் ஒன்று இருக்கும் நிலையில் அப்பகுதியில் தொழிற்பேட்டையோ அல்லது பொருளாதார வலயங்களோ இல்லை என அரச தொழிற் முயற்சி பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய மன்றம் சட்டமூலத்தின் இரண்டாம் மதப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல்வேறு பிரதேசங்கள் சிறிய மழை பெய்தாலும் வெள்ளம் பெருக்கெடுக்கின்றன. இதனால் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளது. அத்துடன பொத்துவில் கல்வி வலயமொன்றை உருவாக்குமாறு கோரி வருகின்றோம். எனினும் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந் நிலையில் ஒலுவில் பகுதியில் வர்த்தக ரீதியாக துறைமுகம் ஒன்றும் மீன்பிடி துறைமுகம் ஒன்றும் உள்ள நிலையில் அப்பகுதியில் தொழிற்பேட்டையோ அல்லது பொருளாதார வலயங்களோ இல்லை. ஆகவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.