கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 23 ஆம் திகதி நண்பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலேயே இவ்வாறு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.