இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் பெருமதிமிக்க ஜின்னா புலமை பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினுடாக 308 இலங்கை மாணவர்களுக்கு பெருமதிமிக்க ஜின்னா புலமைப் பரிசில்கள் அண்மையில் வழங்கி வைத்தது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பி. திஸாநாயக்க இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்டதுடன் கண்டி நகரத்தின் மேயர் கேசரா சேனாநாயக்க விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் இளைய சமுதாயத்தினருக்கான கல்வி வாய்ப்புக்களை அளிப்பதிலே பாகிஸ்தானின் அர்ப்பணிப்பு அளப்பரியது என இதன்போது தெரிவித்தார்.  மேலும் இருநாடுகளும் வருகின்ற காலங்களில் கல்வியியல் வாய்ப்புக்களை அதிகரிக்க இருதரப்பு உறவுகளை மென்மேலும் அபிவிருத்தி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டார்.

பேராசிரியர். உபுல் பி. திஸாநாயக்க கருத்துத்  தெரிவிக்கையில், 

“பாகிஸ்தான் இலங்கையின் மிகநெருங்கிய நட்புநாடு. வரலாற்றின்படி தேவையான தருணங்களில் பாகிஸ்தான் அதன் ஆதரவினை இலங்கைக்கு நிபந்தனையின்றி வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் ஜின்னா புலமை பரிசீலானது கடந்த 12 வருடங்களில் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நன்மையளித்துள்ளது.” 

இந்நிகழ்விலே உரையாற்றிய கண்டி நகரப்பிதா கேசர சேனாநாயக்க பாகிஸ்தான் என்ற தேசத்தினை உருவாக்குவதற்கு தனது வாழ்வினை அர்ப்பணித்த முஹம்மத் அலி ஜின்னாவின் தலைமைத்துவத்தினை வெகுவாக பாராட்டினார். அத்துடன் இப்புலமைபரிசீல்களை அன்பளிப்புச் செய்யும் பாகிஸ்தானிய மக்கள் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

ஜின்னா புலமை பரிசீலானது 2006 ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றதுடன் இதுவரையில் 1800 இலங்கை மாணவர்கள்; இப்புலமை பரிசீல்களை பொற்றுள்ளமை குறிப்பிடதக்கது.