சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்: ஏன் விசாரணைகள் இடைநிறுத்தம்? வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்பா?

Published By: MD.Lucias

23 Feb, 2016 | 07:44 PM
image

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக விசாரணைகள் ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளன? அச்சம்பவத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் அவரது நண்பரும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைதான் அதற்கான காரணமாவென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று சபையில் கேள்வியெழுப்பினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய நாம் எமது சுயாதீனமான செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சபாநாயகராகிய உங்களிடம் கோரிக்கை விடுத்த போது உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறிவித்தீர்கள். 

அதன்போது எமது சகபாடியான டலஸ் அழகப்பெரும எம்.பி. தங்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு  இந்த சபையில் அதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரினார். 

ஆனால் தற்போதுவரையில் அது தொடர்பிலான எந்தவிதமான விசாரணைகள் நடைபெறுகின்றன. யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. 

தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது முழுப்பாராளுமன்றத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். 

அவ்வாறிருக்கையில் தற்போதுவரைவில் ஏன் அச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பகிரங்கப்படுத்தாது இருக்கின்றீர்கள்?. 

தாங்கள் அச்சுறுத்தலுக்கு மன்னிப்பளித்து விட்டதாகவும் பத்திரிகைச் செய்தியொன்று உள்ளது. 

இதன்போது குறிக்கீடு செய்த சபாநாயகர், இல்லை அவ்வாறான தகவல் தவறானது. நான் யாருக்கும் மன்னிப்பு அளிக்கவில்லையென்றார்.  

தொடர்ந்து கருத்து வெளியிட்ட வாசுதேவ எம்.பி நீங்கள் அவ்வாறு மன்னிப்பளிக்கவில்லையென்றால் ஏன் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

அந்தச் சம்பவத்துடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்புபட்டுள்ளமையாலா? அவ்வாறு விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58