கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவிருக்கும் துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் அமையவேண்டும். இங்கு துறைமுகம் அமைந்தால் இருபது லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள், ராஜபக்சவின் விசுவாசிகள்.சீன அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். 

இவர்கள் இங்குள்ள மக்கள் மீதும் அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லாதவர்கள். விழிஞ்ஞம் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் துறைமுகத் திட்டத்தை எதிர்ப்பதற்கு நூறு சதவீத வெளிநாட்டு சதி உள்ளது.