மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து காணாமல்போன சவூதி பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் 24 வயதுடையவராவார்.

வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து 

குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த 7 பேர் பயணித்த படகொன்று மகாவலி ஆற்றில் நேற்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருந்தது. 

இந்நிலையில் 7 பேரில் அறுவர் நேற்றைய தினம் நீரில் இருந்த மீட்கப்பட்டு காப்பற்றப்பட்டதுடன், ஒருவர் ஆற்று நீரில் மூழ்கியிந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன 24 வயதுடைய சவூதி மாணவனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.