இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் பயிற்றுவிப்பாளர் முகாமையாளர் ஆகியோரிற்கு  எதிராக ஐசிசி விதித்த தடைக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் உள்ள இலங்கை அணியினருடன் இது குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இலங்கை அதிகாரிகள்  ஐசிசியின் தடையை எதிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஐசிசிக்கு இன்று இது குறித்து அறிவிக்கப்போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் ஐசிசியின் முடிவிற்கு எதிராக முறைப்பாடு செய்தால் அந்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கு ஐசிசி நீதியாணையாளர் ஒருவரை நியமிக்கவேண்டியிருக்கும்.

மேலும் அவ்வாறான சூழ்நிலையில் ஐசிசியின் மூன்றாவது டெஸ்டின்போது நடைமுறைக்கு வராது  என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

ஐசிசி விதிமுறைகளை பின்பற்றுவதில் தொடர்ச்சியை பேணவில்லை மற்றும் உரிய நடைமுறைகளை  பின்பற்றவில்லை என இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்  தங்கள் முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளனர்.

இலங்கை அணித்தலைவரிற்கு எதிராக மூன்றாவது நாளே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன இரண்டாவது நாளே சுமத்தியிருக்கவேண்டும் எனவும் இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர்,

இரண்டாவது நாள் நடுவர்கள் பந்தை தங்கள் வசம் எடுத்தவேளை அவர்கள் பந்தில் எந்த பிரச்சினையும் இருப்பதாக குறிப்பிடவில்லை எனவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.