மலையகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

Published By: Digital Desk 4

21 Jun, 2018 | 11:43 AM
image

ஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலைமலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது. 

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இத்தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் வளாகப்பகுதியிலும் பதுங்கி இருப்பதுடன் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்பதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த பாடசாலை வளாகத்தியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அவதானித்த பாடசாலை அதிபர், ஹட்டன் பொலிஸாருக்கும், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பலமுறை அறிவித்துள்ளார். எனினும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

எனினும், இந்த ஒருவார காலமாக பாடசாலை வளாகத்தினுள் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அவதானித்த மாணவர்களின் பெற்றோர்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைகள் இருக்கும் பகுதியை அவதானித்ததுடன் சிறுத்தைகளை விரட்டுவதற்காக வெடிகள் கொழுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிறுத்தைகள் வந்தால் விரட்டுவதற்கு சில வெடிகளை மக்களிடமும் கையளித்து சென்றுள்ளனர்.

தேயிலை மலை பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருவதை அடுத்தே சிறுத்தைகள் மக்கள் வாழும் பிரதேசத்தை நோக்கி வருவதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

நுகேகொடையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:34:08
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01