வைத்தியசாலையில் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம் : பதுளையில் பதற்றம்

Published By: MD.Lucias

23 Feb, 2016 | 07:03 PM
image

(க.கிஷாந்தன்)

 பதுளை அரசினர் வைத்தியசாலையில் இரு பிரிவினர் ஏட்டிக்கு போட்டியாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொலைத்தொர்பு டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சருமான  ஹரின் பெர்னாண்டோ அரச வைத்தியர்களை “ஜடையா” என்று அநாகரீகமான வார்தை பிரயோகங்களை பிரயோகித்தமையை கண்டித்து, சுமார் 500கும் அதிகமான வைத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

 பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலான மதிய உணவு வேளை நேரத்தில் நடைபெற்ற வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் ஒரு ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

 நடாத்தப்பட்ட எதிரப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலம் பதுளை ஹாலிஎல பிரதான வீதியினூடான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமும், கலவர நிலையும், பதட்டமான சூழலும் காணப்பட்டன.

 அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதோடு பரஸ்பர மோதல்களை தவிர்ப்பதற்கு வீதியின் இரு மறுங்கிலும் பொலிசாரின் வாகனம் நிறத்தப்பட்டிருந்ததோடு, கலகம் தடுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

 வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பதுளை வைத்தியசாலை வளாகம் எங்கும் கறுப்பு கொடிகளும், கறுப்பு பதாதைகளும்  பறக்கவிடப்பட்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47