பத்து வரு­டங்­க­ளாக சிறை­த்தண்­டனை அனு­ப­வித்­து­வரும் எமது தந்­தையை விடு­தலை செய்­யு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் நாங்கள் தாழ்­மை­யாகக் கேட்டுக் கொள்­கின்றோம். தாயை நிரந்­த­ர­மாக இழந்­துள்ள நாம் தந்­தை­யுடன் வாழ ஆசைப்­ப­டு­கின்றோம். எமது ஆசையை ஜனா­தி­பதி நிறை­வேற்ற வேண்டும் என அர­சியல் கைதி­யாக  சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள ஆனந்த சுதா­கரின் பிள்­ளைகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

நவோ­தய மக்கள் முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் கொழும்பு பிறைடன் ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர்கள் இதனை தெரி­வித்­தனர். 

மேலும், இந் நிகழ்­வின்­போது ஆயுள் தண்­டனை பெற்­றுள்ள அர­சியல் கைதி­யான ஆனந்த சுதா­கரின் பிள்­ளை­க­ளுக்­கான கல்வி செல­வுக்கு ஒரு தொகை நிதியும் பாட­சாலை உப­க­ர­ணங்­களும் முன்­னி­ணியின் தலைவர் எஸ்.கே. கிருஷ்­ணா­வினால் வழங்­கப்­பட்­டது.

ஊடக சந்­திப்பின் போது கருத்து தெரி­வித்த ஆனந்த சுதா­கரின் மகள் ( சங்­கீதா )
நான் ஜனா­தி­ப­திக்கும் அவ­ரு­டைய மக­ளுக்கும் எமது தந்­தையை விடு­விக்க உத­வு­மா­று­கோரி கடிதம் எழுதி அனுப்பி வைத்­துள்ளேன். அதில் '' தாயும் இல்­லாமல் தந்­தையும் இல்­லாமல் இந்த வீட்டில் எம்மால் தனி­மையில் இருக்க முடி­யாது. ஜனா­தி­பதி உங்­களை தான் நாங்கள் கட­வு­ளாக நினைத்து எமது தந்­தையை விடு­விக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கின்றோம். எம்மால் இரு கடி­தங்கள் அனுப்­பப்­பட்டும் அதற்கு இது வரையில் பதில் ஏதும் கிடைக்­க­வில்லை என்றார். 

மகன் (கனி­ரதன்) கருத்துத் தெரி­விக்­கையில்
எமது தாய் இறந்­து­விட்டார். தந்தை 10 வரு­டங்­க­ளாக சிறை­யி­லி­ருக்­கின்றார். என்­னு­டைய நண்­பர்கள் அனை­வரும் தங்­க­ளு­டைய தந்­தை­யுடன் வெளி­யி­டங்­க­ளுக்கு செல்­வ­தையும், விளை­யா­டு­வ­தையும் பார்க்கும் சந்­தர்ப்­பங்­களில் எமக்கு அது மிகுந்த மன வேத­னையை அளிக்­கின்­றது. எனக்கும் தந்­தை­யுடன் விளை­யாட அவ­ருடன் வாழ ஆசை­யாக இருக்­கி­றது. எனவே ஜனா­தி­பதி மாமா எங்கள் தந்­தையை விடு­தலை செய்­யுங்கள் என தாழ்­மை­யுடன் கேட்டுக் கொள்­கின்றேன் என்றார். 

ஆனந்த சுதா­க­ரனின் தாய் (சுமதி) கருத்துத் தெரி­விக்­கைியல்
எனது மகன் எந்த குற்­றங்­களும் செய்­யாமல் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு குற்­றப்­பத்­தி­ரி­கையில் கைழுத்து பெற்­றப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில்  வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஷ்­வரன் ஜனா­தி­ப­தி­யிடம் கூறி­யுள்­ளதை அறிவோம். இது தவிர எந்த தமிழ் அர­சியல் தலை­வர்­களும் எனது மகனின் விடு­தலை பற்றி எந்த முயற்­சியும் மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்iலை. எனக்கு பணமோ அல்­லது பிள்­ளை­க­ளுக்கு புத்­த­கங்­களோ தேவை­யில்லை. நாம் கேட்டுக் கொள்­வது ஒன்று தான். எமது மகன் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்றார்.