சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் 6,000 பேர் பங்கேற்றுள்ளனர். உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும் எனவும் தெரிவித்தார். மனம், அறிவு, உடலை இணைத்து யோகா அமைதியை உருவாக்குகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.