"83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம்"

Published By: Vishnu

21 Jun, 2018 | 08:12 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணி­களை விடு­விக்க வேண்­டி­யுள்­ளது. அதனை நாம் கட்­டா­ய­மாக விடு­விப்போம் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீநேசன் கொண்டு வந்த வடக்கு,கிழக்கு காணி விடு­விப்பு தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மட்­ட­க்க­ளப்பு மாவட்டத்தில் பல்­வேறு இடங்­களை இரா­ணு­வத்­திடம் இருந்து விடு­விப்­பது தொடர்பில் இரா­ணுவ தள­ப­தி­யுடன் பேசினேன். ஒரு வருட காலப்­ப­கு­தியில் அதனை விடு­விக்க முடியும் என அவர் என்­னிடம் கூறினார். இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு மாற்று காணி தேவை­யாகும். தற்­போது அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முழு முகா­மையும் அங்கு கொண்டு செல்ல வேண்டும்.

இரா­ணுவ முகா­மொன்றுக்கு புதி­தாக காணி­யொன்றை சுவீ­க­ரிக்க பெரும் காலம் தேவை­யாகும். அடிப்­படை வச­திகள் சீர் செய்ய வேண்டும். என்­றாலும் வடக்கு, கிழக்கு காணிகள் விடு­விப்பு கட்­டா­ய­மாக நடக்கும். இரா­ணு­வத்தை அங்கே வைத்­துக்­கொள்ள மாட்டோம். தற்­போது அதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்ளோம். மீண்டும் இரா­ணுவ தள­ப­தி­யுடன் பேசி நட­வ­டிக்கை எடுப்பேன். முழு­மை­யாக அதனை துரி­தப்­ப­டுத்த ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம்.

வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணிகளை கட்டாயம் விடுவிப்போம்.தாமதம் உள்ளது. என்றாலும் நிச்சயமாக விடுவிப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28