நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. 

இலங்கையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணித்தல், மேம்படுத்தல் ஆகியன இச்சங்கத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. 

தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தொழில்சார் தகவல் பரிமாற்றம், தேசிய மற்றும் சர்வதேச தொழில்சார் தொடர்புடைய நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்தலும் அவற்றின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதும் இச்சங்கத்தின் நோக்கமாகும். 

காணி விற்பனை மற்றும் பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் செயற்திட்டங்களின் தொழில்வாய்ப்புகளை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அரச அலுவலகங்களுடனான ஒருங்கிணைப்புப் பணிகளை இச்சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

சங்கத்தின் தலைவர் எஸ்.சீலனால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.