டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து  தமிழக அரசியல் சூழல் தொடர்பாக விவாதித்துள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் மாநில கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே  கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.