தோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 08:16 PM
image

சப்புமல் கந்த தோட்டத்தில் கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மலையகத்தில் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்களுக்கு பதிலாக தோட்ட கம்பனிகள் கடுபொல் எனும் முள்ளுத்தேங்காய் பயிரினை பயிரிட்டு வருகின்றது. இந்த கடுபொல் எனும் முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பாக அதன் பாதக விளைவுகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தொழிலாளர்களும் இதற்கெதிராக தமது அதிர்ப்தியினையும்    ஆர்பாட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று கேகாலை மாவட்டம் தெரணியகலை லலான் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் சப்புமல்கந்த தோட்டத்தில் வல்பொல்; தோட்ட நிர்வாகம் கடுபொல் பயிர் நாட்டல் தடையை மீறி இரகசியமாக ஆட்களைக்கொண்டு பயிரிட்டுள்ளது. 

அதனை கேள்விப்பட்ட தெஹியோவிட்ட பிரதேசசபையின் வல்பொல தொகுதி தமிழ் உறுப்பினர்  உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்று தோட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தோட்ட அதிகாரி பிரதேசசபை உறுப்பினரை தரக்குறைவாக பேசி அவரை தாக்க முற்பட்டுள்ளார். 

இதனால் தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இதற்கு எதிராக சப்புமல் கந்த மேல்பிரிவு, வல்பொல, குரியான மேல்பிரிவு, கீழ்ப்பிரிவு, மாயின் கந்த இல 1, மாயின்கந்த இல 2, சப்புமல் கந்த இறப்பர் பிரிவு ஆகிய தோட்டப்பிரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுபொல் தவறனை காணப்படும் குரியான தோட்டத்தில் வரக்கதன்ன பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

இதன்போது மக்கள் பிரதேச சபை உறுப்பினரை தாக்க முற்பட்டமைக்கு மன்னிப்புகோரவேண்டும் என கோசங்களை எழுப்பியும் கடுபொல் பயிரை நாட்ட வேண்டாம் என்றும் தமது எதிர்பப்பினை வெளியிட்டனர். இதன்போது தெரணியகலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டும் மக்கள் தொடர்ந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31