(எம்.ஆர்.எம்.வஸீம்) 

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், 

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

வடக்கின் மீள்குடியேற்ற அமைச்சர் என்றவகையில் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் பொது இடங்களை புனருத்தாபனம் செய்வதற்காகவும் அமைச்சரவைக்கு அனுமதிப்பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.